தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் மக்கள் மனம் கவரும் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துக்கொண்டவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. அவரது படங்கள் பெரும்பாலும் புதிய கோணங்கள் மற்றும் தனித்துவமான தலைப்புக்கள் கொண்டவையாக காணப்படும்.
அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற “மார்கன்” திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, தலைப்புரிமை தொடர்பான ஒரு முக்கியமான விவகாரத்தை நிரூபர்களிடம் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதமாகப் பரவி வருகின்றது.
விஜய் ஆண்டனி சில வருடங்களுக்கு முன் தனது நடிப்பில் உருவாகும் ஒரு படத்திற்கு “பராசக்தி” என்ற தலைப்பை பதிவு செய்திருந்தார். “பராசக்தி” எனும் பெயர், தமிழர்களின் மனதில் பெரும் மதிப்புக் கொண்ட ஒரு பெயராக இருந்தது. குறிப்பாக, சிவாஜி கணேசன் நடிப்பில் 1952-ம் ஆண்டின் புரட்சி திரைப்படம் இதே தலைப்புடன் வெளியாகி தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருந்தது.
அதனால் தான், இந்தப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது குறித்த வரவேற்பு சமூக வலைத்தளங்களில் உருவாகி வந்தது. எனினும், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் “பராசக்தி” என்ற பெயர் வைத்திருப்பதனால் இந்த தலைப்பு விவகாரம் சமீபகாலமாக பெரும் விவாதத்தை ஏற்படுத்திவந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் ஆண்டனி, "இந்த சர்ச்சை பராசக்தி படத்தில் தான் நடந்தது. அதுவும் எதிர்பாராதவிதமாகத் தான் அப்படத்தில் நிகழ்ந்தது. சிவகார்த்திகேயன் வைத்த பராசக்தி என்ற தலைப்பு மக்கள் மத்தியில் reach ஆகிவிட்டது. இதனால் தான் நானே அந்த தலைப்பினை விட்டுக்கொடுத்து விட்டேன்." எனத் தெரிவித்திருந்தார்.
Listen News!