• May 29 2025

மோகன்லால் ok சொன்ன கதையை.."96" படம் கலைத்துவிட்டது..! ஆதங்கத்தில் அர்ச்சனா..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

2012ம் ஆண்டு தமிழில் வெளியான ‘அரவான்’ திரைப்படம் ஒரு வரலாற்றுச் சாயலுடைய படமாக அமைந்திருந்தது. அப்படத்தில் மலையாள நடிகை அர்ச்சனா கவி கதாநாயகியாக மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இவரது நேர்த்தியான நடிப்பு மற்றும் அழகு என்பன தமிழ் ரசிகர்களிடையே ஓர் அழுத்தமான ஈர்ப்பை ஏற்படுத்தியது.


திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஓய்வுபெற்ற அர்ச்சனா, தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் இடம்பிடித்துள்ளார். இந்நடிகை சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்களுக்கு திடுக்கிடும் ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

அர்ச்சனா, தனது திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் ஒரு புதிய பாதையை தேடிச் சென்றார். நடிப்பிலிருந்து பின்னால் நகர்ந்தாலும், திரைக்கதைகள் எழுதும் பணியில் தனது சிந்தனைகளை ஊற்றி, மோகன்லால் மற்றும் வித்யாபாலன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஒரு தனிப்பட்ட காதல் கதையை உருவாக்கினார்.


அந்தவகையில் அர்ச்சனா அந்நேர்காணலில், “நான் ஒரு எழுத்தாளராக உருவெடுக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். அதை நிஜமாக்குவதற்காக, ஒரு காதல் கதையை எழுதி வைத்திருந்தேன். அதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் மோகன்லால் மற்றும் வித்யாபாலன் இருவரையும் பாவித்து உருவாக்கினேன். அந்தக் கதையை மோகன்லாலுக்கு கூறிய போது அவர் மிகவும் ரசித்தார். ‘இந்தக் கதை சூப்பரா இருக்கு’ என்று தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.


மேலும்," அந்தக் கதையை தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்று, படமாக்குவதற்கான முயற்சியில் இருந்தபோது தான் “96”படம் வெளியானது. அதில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர். அதே கருப்பொருளில் தான் எனது கதையும் இருந்தது. இதனால் எனது கனவு கலைந்துவிட்டது." என உணர்ச்சி பூர்வமாக தெரிவித்திருந்தார்.

அர்ச்சனா கவி, ஒரு நடிகையா இருந்தாலும், தனது உணர்ச்சி நிறைந்த எழுத்தால் ஒரு படத்தை உருவாக்க நினைத்திருந்தார். ஆனால், 96 திரைப்படம் அவரது கனவை தற்காலிகமாக நிறுத்திவிட்டது. இருப்பினும், தன்னம்பிக்கையை விட்டுவிடாமல், மீண்டும் தனது முயற்சியைத் தொடருவேன் எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement