மலையாள சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் உன்னி முகுந்தன் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.
இவர் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு எனப் பல மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியிலும் பல கோடிகளுக்கு மேல் பெற்றிருந்தது.
இந்த நிலையில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான "நரி வேட்டை" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து உன்னி முகுந்தனின் மேலாளர் விபின், காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
"நரி வேட்டை" திரைப்படத்தினைப் பாராட்டி தனது face book-ல் பதிவிட்டதற்காக உன்னி முகுந்தன் மேலாளர் விபினைத் தாக்கியதாகவும், கொடூரமான வார்த்தைகளால் தன்னை திட்டியதாகவும் அளித்த புகாரின் பெயரில் உன்னி முகுந்தன் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!