தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல், அரசியல் ரசிகர்களையும் கவர்ந்துள்ளவர் தான் நடிகர் சீமான். இவர் எப்போதும் தனது கருத்துக்கள் மூலம் தீயாய் பரவும் பேச்சாளராகவும், அரசியல் விழிப்புணர்வு கலந்த நகைச்சுவை பேச்சுக்களால் ரசிகர்களை மகிழ்விக்கக் கூடியவராகவும் விளங்குகின்றார்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஒரு சாதாரண சினிமா விழாவாக இல்லாது சீமானின் கலக்கல் பேச்சு நிறைந்த மேடையாக காணப்பட்டது. விழாவின் போது சீமான், சரத்குமார் பற்றிய சில சுவாரஸ்யமான கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்.
அதன் போது அவர் தெரிவித்ததாவது, "நான் சரத்குமார் அண்ணாவுடன் நெருக்கமாக இருப்பேன். ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியான சமயத்தில் நாங்கள் விமான நிலையத்தில் சந்தித்தோம். அப்ப நான் சிரிச்சுக்கிட்டே, 'இந்த வயசில உனக்கு ஐஸ்வர்யா ராய் கூட ஜோடியாக நடிக்கணுமோ.? என்று நகைச்சுவையாகக் கேட்டேன்." என்றார் சீமான்.
இதற்கு சரத்குமார், "உனக்கு பொறாமைடா...!" என்று பதிலளித்ததாகவும் கூறினார். இந்த சம்பவத்தை எடுத்துக்காட்டாக வைத்து, சீமான் மேலும் கூறியதாவது, "ஒருத்தருக்கு உடம்பு நல்லா இருந்தால் எந்த வயசிலயும் நடிக்க முடியும். சரத்குமார் அண்ணா அதை நிரூபிச்சிட்டார். வயசு வந்தாலும்... அந்த உற்சாகம் இருந்தால் ரசிகர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வாங்க." என்றார்.
Listen News!