பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா எல்லாரும் வேணாம் என்று சொன்ன பிறகும் இந்த ரெஸ்டாரெண்டை ஆரம்பிச்சிருக்கோம் யாரோ ஒரு கவுன்சிலருக்காக எல்லாம் இதை மூடக் கூடாது என்று தனக்குத் தானே சொல்லுறார். மேலும் இதைவிட பெரிய பிரச்சனை வந்தாலும் சமாளிச்சு இந்த ரெஸ்டாரெண்டை நடத்தி தான் ஆகவேண்டும் என்கிறார். இதனை அடுத்து பாக்கியாவ வெளியில விட்டு ஈஸ்வரி கதவை பூட்டியிருப்பதைப் பாத்து யார் இந்த வேலையைப் பாத்தது என்று யோசிக்கிறார்.
அதைத் தொடர்ந்து எழில் ஈஸ்வரியைப் பாத்து அம்மா இன்னும் வரலையா என்று கேக்கிறார். அதுக்கு ஈஸ்வரி அவள இன்னும் காணேல என்று சொல்லுறார். பின் எழில் அம்மாவப் போய் பாத்திட்டு வாறேன் என்று கிளம்புறார். இதனை அடுத்து எழில் வெளியில வந்து பாக்கியா நிற்கிறதைப் பாத்து நீங்க எப்ப அம்மா வந்தனீங்க என்று கேக்கிறார்.
அதுக்கு பாக்கியா என்னடா புதுசா கதவை எல்லாம் பூட்டி வைக்கிறீங்க என்று கேக்கிறார். அதுக்கு எழில் யார் பூட்டினது என்று தெரியல அம்மா என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து பாக்கியா ஈஸ்வரியைப் பாத்து கதவை யார் பூட்டினது என்று கேக்கிறார். அதுக்கு ஈஸ்வரி நான் தான் பூட்டினான் என்கிறார். மேலும் வீட்ட யாரும் இல்ல அதுதான் பூட்டிட்டு இருந்தேன் என்று சொல்லுறார்.
இதனை அடுத்து ஈஸ்வரி கோபியைப் பாத்து இனிமேல் அவள ரெஸ்டாரெண்டுக்கு போக வேணாம் என்று சொல்லு என்கிறார். பின் பாக்கியா அந்த ரெஸ்டாரெண்ட் ஓனருக்கு கவுன்சிலர் வந்து சாப்பாடு தரச் சொல்லி கலாட்டா பண்ணதைச் சொல்லுறார். அதைக் கேட்ட ஓனர் கடையை உங்ககிட்ட கொடுத்தாச்சு இனி என்ன பிரச்சனை வந்தாலும் அதுக்கு நீங்க தான் பொறுப்பு என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!