தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கையான நடிப்பு, அழகு மற்றும் எளிமையான பேச்சு என்பன மூலம் rising star என்ற பெயரால் அனைவரது கவனத்தையும் பெற்றவர் தான் ஜோதி மீனா. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதி, ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா அனுபவம், டான்ஸ் பயணம் மற்றும் பிடித்த நடிகர்கள் குறித்து மனம் திறந்து கதைத்துள்ளார். அவரின் கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரது இதயத்தைக் கொள்ளை கொண்டுள்ளது.
பேட்டியின் தொடக்கத்தில் ஜோதி மீனாவிடம் "இப்போது நிறைய பேர் டான்ஸ் class-ல பயிற்சி பெறுகிறார்கள். உங்களுக்குப் பிடித்தமுறை எது?" என நடுவர் கேட்டிருந்தார். அதற்கு ஜோதி, “நான் என்ன சொல்றேன் என்றால்… dance class-ல ஆடுறதைவிட, சினிமாவில ஆடுறது தான் ரொம்ப நல்லா இருக்கும். அதில ஒரு feel இருக்கே... அது எந்த trainingலயும் கிடைக்காது!” என்றார்.
அதே நேரத்தில், இன்றைய சமூகவலைத்தள ரீல்ஸ்களில் தங்களது talent-ஐ வெளிக்காட்டும் இளைஞர்கள் குறித்தும் சில கருத்துக்கள் பகிர்ந்தார். அவர் கூறியதாவது,“இந்த காலத்தில் reels பண்ணுறவங்க…ரொம்ப நல்லா ஆடுறாங்க! அதை நிச்சயமாக பாராட்டவேண்டும். அவர்களுக்கு கூட support தேவை…” என்றார்.
சினிமா வாழ்க்கையைப் பற்றியும், தனது அனுபவங்களை பகிர்ந்த ஜோதி மீனா, பல வருடத்திற்கு முன் வெளியான "அருவா வேலு" படத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் கூறியிருந்தார். அதன்போது, “அந்த படத்தில் ஒரு dance sequence-க்கு நான் தான் steps சொல்லிக் கொடுக்க வேண்டியது. ஆனா அந்த situation ரொம்ப tough-ஆ இருந்தது. சில நேரம் instructions கேட்ட மாதிரி இல்ல, அடிக்கடி ரீடேக்... ரொம்ப சிரமப்பட்டேன்…” என்றார். இத்தகவல்கள் தற்பொழுது வைரலாகின்றன.
Listen News!