• May 29 2025

மனஉளைச்சலில் தவிச்சேன்..! 16 வயசில கல்யாணம்.. கண்ணீரில் பெசன்ட் ரவி.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் பெசன்ட் ரவி. வெகு நாட்களாக சின்னத்திரை, சமூக ஊடகம், யூடியூப் மற்றும் திரைப்படங்களில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர். சமீபத்தில் தனது மனைவியுடன் இணைந்து அளித்த அதிரடி நேர்காணல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த நேர்காணலில், ரவி தனது தனிப்பட்ட வாழ்க்கையின் உணர்வுகளை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். குறிப்பாக, தனது மன அழுத்தப் பிரச்சனை, மனைவியின் துணை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து கூறிய ஒவ்வொரு விடயமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


நேர்காணலில் ரவி உணர்ச்சிவசமாக தனது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தைக் கூறியிருந்தார். “அந்த நேரத்தில் எனக்கு Anxiety Disorder இருந்தது. உயிரை மாய்த்துக்கலாம் என நினைத்த தருணமும் வந்தது. ஆனா என்னுடைய மனைவி என்னைக் குழந்தை போல பார்த்தாங்க. அதனால தான் இன்று நான் நன்றாக இருக்கேன்.." என்றார் ரவி.

மேலும், "இதனால் தான் என்னுடைய மனைவி என்ன கேட்டாலும் வாங்கித் தரவேண்டும்… சந்தோஷமா வச்சிருக்க வேணும்…" என்ற எண்ணம் வந்தது எனவும் தெரிவித்தார். ரவி தனது திருமணம்  பற்றியும் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார். “நான் கல்யாணம் பண்ணப்போ 22 வயசு... அவங்ளுக்கு  16 வயசு தான்...” என்றும் கூறினார். 


இது குறித்து ரவியின் மனைவி சிரித்த வண்ணம் சொன்னார், “சின்ன சின்ன விஷயத்துக்கு ரவிக்கு கோபம் வந்துடும். அதுதான் எனக்கு பிடிக்காது…”இந்த வார்த்தைகள் அவர்களுக்கு இடையே இருக்கும் காதலை வெளிப்படுத்துகிறது.

இந்நேர்காணல் இணையத்தில் வெளியாகியதிலிருந்து, ரசிகர்கள் இதற்கு உணர்வுபூர்வமான பதில்களை வழங்கி வருகின்றனர். பலர், “உண்மையான காதல் இதுதான்”, “ஒருவரின் கஷ்டத்தில் துணையாக இருப்பது தான் வாழ்க்கை” எனப் பதிவிட்டுள்ளனர். இத்தகைய நேர்காணல்கள், பார்ப்பவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிந்தனைகளை ஊக்குவிக்கின்றன.


Advertisement

Advertisement