• Jun 19 2026

கர்நாடகாவுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம்! கமல்ஹாசன் அறிக்கை

shali / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

கர்நாடக அரசின் மேகதாது திட்டம் தமிழ்நாட்டின் நீர் உரிமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நீண்டகாலமாக நிலவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவது முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


தனது அறிக்கையில், “கர்நாடக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தம்பி விஜய் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தமிழ்நாட்டின் நலன் மற்றும் விவசாயிகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் இந்த முயற்சியில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

மேகதாது பிரச்சினை என்பது வெறும் அரசியல் விவகாரம் அல்ல; அது காவிரி நீரை நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற கருத்தும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. கமல்ஹாசனின் இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement