• Dec 26 2024

நடிகர் விஜய்க்கு போட்டியாக அரசியலில் களமிறங்கும் பிரபல நடிகர்? விரைவில் கட்சிப் பெயரும் அறிவிப்பாம்..?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படுபவர் தான் தளபதி விஜய். தற்போது மக்கள் நலனுக்கான தனது அரசியல் பயணத்தை அரம்பித்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாக்கி வரும் நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு முழு நேரமாகவே  அரசியலில் இறங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கான, 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி  அண்மையில் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். 


மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, ஆனால் 2026ம் ஆண்டு இடம் பெரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு போட்டியாக பிரபல தமிழ் நடிகரான விஷாலும் கட்சியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


அதன்படி, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட முயற்சித்த விஷால், தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் இயக்கம் என்று மாற்றி பல நல திட்ட பணிகளை செய்து வருகிறார். 

இவ்வாறான நிலையில், விஷாலும் விரைவில் புதிய கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

Advertisement