• Dec 26 2024

எழுதி கொடுத்த வசனத்தை பேசுவது அல்ல அரசியல்: விஜய் அரசியல் குறித்து பிரபல இயக்குனர்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


இயக்குனர் எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவது போல் அல்ல அரசியல் என்றும் மக்களிடம் உணர்வுபூர்வமாக அணுக வேண்டும் என்றும் நயன்தாரா நடித்த ’அறம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் என்பவர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் அவர் 2026 ஆம் ஆண்டு நேரடியாக அரசியலுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா நடித்த ’அறம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார், ஊடகம் ஒன்றில் பேட்டி அளிக்கும் போது விஜய் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.



ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள், அவர்களுடைய கொள்கைகள் என்ன, என்பதை விரிவாக விளக்க வேண்டும்.

ஒரு நடிகர் என்பவர் இயக்குனர் எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதும், அதே நடிகர் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு மக்கள் முன் உணர்வுபூர்வமாக பேசுவதும் முற்றிலும் வித்தியாசமானது. முதலில் விஜய் தனது கட்சியின் கொள்கை என்ன என்று சொல்ல வேண்டும். பல கட்சிகள் தங்களுடைய கொள்கைகளை அறிவித்து அந்த கொள்கைகளில் முழு ஈடுபாட்டுடன் உள்ளது. அதேபோல் விஜய்யும் தனது கட்சி கொள்கைகளை அறிவித்த பிறகு, அவர் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து தான் அவரது அரசியல் வரவேற்கப்பட வேண்டியதா? அல்லது தவிர்க்கப்பட வேண்டியதா? என்பது தெரியும் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement