• Dec 25 2024

தந்தை- மகன்கள் பாசம்...பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குடும்பம் கலக்கலாக வெளியிட்டுள்ள வைரல் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. இதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஆரம்பமாகிவிட்டது.


இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிக்கும் சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் இணைந்து  தங்களுடைய கதாபாத்திரம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்து காணொளி ஒன்றை ரிலீஸ் செய்துள்ளனர்.     


பாண்டியன் ஸ்டோர்ஸ்  தொடரின் முதல் சீசன் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை கதைக்களமாக எடுத்துக் கொண்ட இயக்குநர், இரண்டாவது சீசனில் தந்தை -மகன்கள் பாசத்தை மையமாக கொண்டு எடுத்துள்ளார். அதன்படி,  இரண்டாவது சீசனின் கதைக்களம் முதல் சீசனிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.


ஜிதா, குமரன் தங்கராஜன் போன்ற மக்களுக்கு மிகவும் பேவரைட்டான நடிகர்கள் யாரும் இந்த சீசனில் இடம்பெறவில்லை. அதன்படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிகர் அஜய் ரத்னம் இணைந்துள்ளார். இவர் சின்னத்திரை, பெரியதிரை என இரண்டிலும் நடிக்கும் பிரபலமான நடிகராவார். 


மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அவரது மகன்கள், மகள்கள் என களைகட்டும் ப்ரமோக்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த தொடரில் முதல் சீசனில் மீனாவாக நடித்திருந்த ஹேமா மீண்டும் இத் தொடரில் மீனாவாகவே களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 


இத்தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்கள் எப்படிபட்டது என்பதை மக்களுக்கு விளக்கும் முகமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து காணொளி பதிவு செய்துள்ளனர். ரொம்பவும் கலகலப்பாக பேசிய அருமையான காணொளி இதோ... 


Advertisement

Advertisement