• May 08 2025

Churchக்குப் போய் Time Waste பண்ணுறதை விட மக்களுக்கு உதவலாம்; நடிகர் ஸ்ரீகுமார் பகிர்வு!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ஸ்ரீகுமார், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தன்னுடைய வாழ்க்கைப் பயணம், ஆன்மீக நம்பிக்கை மற்றும் சமூகத்துக்காக அவர் செய்கின்ற சேவைகள் குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பையும் விவாதத்தையும் உருவாக்கி வருகின்றன.

ஸ்ரீகுமார் பேட்டியின் போது, "எனக்கு ஜீசஸ் மேல ரொம்ப ஈடுபாடு. நான் இயேசுவின் செயல்களை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்கிறேன். அதனால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையை நடத்துகிறேன்." என உருக்கமாகக் கூறியுள்ளார். 


மேலும், "தனக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் churchக்குப் போய் டைம் வேஸ்ட் பண்ண பிடிக்காது என்றதுடன் இறைவன் அங்கு இல்லை கஷ்டப்படுகின்ற ஏழை மக்களில் தான் இருக்கிறார்." என்று கூறியுள்ளார். அவரின் இந்த கூற்றுக்கள் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டு, பலரிடமும் பலவிதமான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

ஸ்ரீகுமார் பகிர்ந்த இந்த உண்மையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பலர் அவரை பாராட்டியுள்ளதுடன், "இவரைப் போல ஒரு நடிகர் உண்மையில் இருக்க வேண்டும்..!" என உருக்கமாகக் கருத்துக்களையும் எழுப்பியுள்ளனர்.

Advertisement

Advertisement