தமிழ் சினிமாவில் வலிமையான குணச்சித்திர கதாப்பாத்திரங்களின் அடையாளமாக விளங்கும் நடிகர் சத்யராஜ், தனது திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். இவர் பல திரைப்படங்களில் தனது பன்முகத் திறமை மூலம் நடித்திருந்தார். அத்துடன் திரை உலகத்தை தாண்டியும் சமூக, அரசியல் கருத்துக்களில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துபவராக சத்யராஜ் விளங்குகின்றார்.
இவரது மகளான திவ்யா சத்யராஜ், திரைத்துறையில் இருப்பவரல்ல, ஆனாலும் சமூக கருத்துக்களில் தனது தெளிவான நிலைப்பாடுகள், உரத்த பேச்சுக்கள் என்பன மூலம் சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு கூட்டத்தையே உருவாக்கியுள்ளார்.
அந்தவகையில், தற்போது திவ்யா சத்யராஜ் தனது இணையத்தளத்தில் பதிவிட்ட ஒரு கருத்து, இணையத்தை வெகுவாக கவர்ந்து வருகின்றது. குறிப்பாக, தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் குறித்து அவர் வெளியிட்ட கருத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திவ்யா தனது இணையத்தளப் பதிவில் கூறியதாவது, "பிறர் என்னிடம் ‘அஜித் சார் பிடிக்குமா அல்லது விஜய் பிடிக்குமா?’ என்று கேட்கும் பொழுது, நான் எப்போதும் 'எனக்கு அஜித் சார் தான் பிடிக்கும்' என்று சொல்லுவேன்." என்றார். மேலும் அஜித் சார் பெண்களை மதிப்பவராக காணப்படுகின்றார் எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!