தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சோனா சமீபத்தில் தன் வாழ்க்கை பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இவர் தனது படங்களில் அதிகம் கிளாமர் காட்டி நடித்து வருகின்றார். பொதுவாக ஒரு கிளாமர் ஹீரோயினாக அறியப்பட்ட இவர் கடந்த ஆண்டு வெளியாகிய பூமர் அங்கிள் படத்தில் சூப்பர் ஆக நடித்திருந்தார்.
சமீபத்தில் பல நேர்காணலில் கலந்து கொண்டு பேசி வருகின்றார். அந்த வகையில் தற்போது தனது சொந்த வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து பேசியுள்ளார். 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமைக்கு இது தான் காரணம் என கூறியுள்ளார். மேலும் பல ஹீரோக்கள் உடன் ஏற்பட்ட கிசு கிசுக்களிற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நேர்காணலில் அவர் "நான் கிளாமர் ஹீரோயின் என்பதால் என்னை யாரும் திருமணம் செய்து கொள்ளவில்லையோ என தோன்றுகிறது. பலரும் என்னிடம் வந்து உன்னை வெச்சிக்குறேன் என்று சொல்வார்களே ஒழிய திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதில்லை. என்னை வெச்சிக்குறேனு சொல்பவர்களை பார்த்து சில நேரம் கத்தியிருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். சில சமயம் அப்படியே அவர்களை பார்த்துக் கொண்டிருப்பேன். எப்படி இப்படி கேட்க உங்களுக்கு மனது வருகிறது என்றுதான் எனக்கெல்லாம் தோன்றும். " என கூறியுள்ளார்.
Listen News!