தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் நடிகர் ஜெய் மீது, நடிகை சோனா ஆவேசமான குற்றச்சாட்டு ஒன்றினை எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் "ஜெய் ஒரு 'பிளேபாய்', பெண்களை ஏமாற்றும் ஆள்!" என கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கதைத்த நடிகை சோனா, நடிகர் ஜெய் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "ஜெய் நல்ல மனிதர் என்று பலரும் நினைக்கிறார்கள். நானும் அதைப்போல் தான் நினைத்தேன். ஆனால், உண்மையில் அவர் பெண்களை உபயோகப்படுத்தும் ஆளாக தான் இருக்கிறார். அவரிடம் நான் மிகவும் மதிப்புடன் நடந்தேன். ஆனால், பின்னர் அவரின் உண்மையான முகம் தெரிய வந்தது," என்று அவர் கூறியுள்ளார்.
சோனாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. சிலர், "சோனா ஏன் இவ்வளவு காலத்திற்கு பிறகு இதை வெளிப்படுத்துகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்புகின்றனர். மற்றொருபுறம், "பிரபல நடிகரான ஜெய் மீது இத்தனை பெரிய குற்றச்சாட்டு வந்திருக்கும் போது, அவர் இதற்கு என்ன பதில் சொல்வார்?" எனப் பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இதுவரை நடிகர் ஜெய் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது, அவருக்கு எதிராக மேலும் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கலாம். சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு இடையே பல சர்ச்சைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது அனைத்து ஜெய் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!