• Dec 25 2024

350 ரூபா சம்பளத்திற்கு சலூன் கடையில் வேலை செய்த நடிகை சோனா.. இவர் வாழ்க்கையில் இத்தனை சோகமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் கிட்டத்தட்ட 11வருடங்களுக்கு மேலாக கொடி கட்டிப் பறந்து வருகின்ற ஒருவர் தான் நடிகை சோனா ஹைடன். இவர் மாரி சீரியலில் தாரா என்ற வேடத்திலும் நடித்து வருகின்றார். சினிமாவில் இவர் கிளாமர் நிறைந்த ஒருவராகவும் இருந்திருக்கின்றார். அந்த வகையில் சீரியலைத் தாண்டி படங்களில் இவரது தூக்கல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். 


தற்போது படங்களை விடுத்து சீரியல்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அந்தவகையில் சீரியலில் அதிகமாக வில்லி ரோலில் தான் நடித்து வருகின்றார். இவர் 'அபி ட்ரெயிலர், ரோஜா, மாரி' எனப் பல சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.

சீரியல்களில் வருவதற்கு முன்னர் இவர் தனது நேரம் முழுவதையும் படங்களில் தான் செலவழித்து வந்தார். மேலும் இவர் ஒரு மாடலும் கூட. இவர் ரொம்பவே நன்றாகப் படிக்கக் கூடியவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.


இவர் ஜூன் மாதம் 1-ஆம் தேதி 1979 இல் பிறந்தவர். நன்றாகத் தமிழ் பேசக் கூடிய ஒருவர். இவர் பக்கத்தில் உள்ள கடை ஒன்றிற்குச் சென்ற போது தயாரிப்பாளரின் மானேச்சர் ஒருவர் "நடிக்க வாறீர்களா" எனக் கேட்டிருக்கின்றார். அதற்கு அவர் முடியாது எனக் கூறி இருக்கின்றார். பின்னர் கிட்டத்தட்ட 1மாதமாக இவரைப் பின்தொடர்ந்து சம்மதம் வாங்கியுள்ளனர்.

அப்படி சம்மதம் வாங்கிய படம் தான் 'அன்பே சிவம்'. ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. ஒரு சீன் மட்டும் அப்படத்தில் நடித்து விட்டு பின்னர் அப்படத்தை விட்டே போய் விட்டார். 


இதனைத் தொடர்ந்து இவரின் முதல் படம் என்றால் அது அஜித் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்' என்ற திரைப்படம் தான். இதில் ஜோதிகாவின் நண்பியாக நடித்துள்ளார். இதையடுத்து விஜய்யின் 'சாஜகான்' படத்திலும் ஹீரோயினுக்கு நண்பியாக நடித்தார்.

இவர் நடிக்க வந்ததற்கு முக்கிய காரணமே அவரின் குடும்ப சூழ்நிலை தான். ரொம்ப வறுமையில் வாடி இருக்கின்றார். அத்தோடு குறைந்த சம்பளத்திற்கு சலூன் கடை ஒன்றிலும் வேலை புரிந்து இருக்கின்றார். அதாவது அதில் அவர் வாங்கிய சம்பளம் வெறும் 350ரூபா மட்டுமே. 

அந்தசமயத்தில் படத்தில் நடித்து 6நாட்களில் இவருக்கு கிட்டத்தட்ட 25000 ரூபா இவருக்கு கிடைத்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து படங்களிலே அதிகளவில் கவனம் செலுத்த தொடங்கினார். அந்தவகையில் ஒரே வருடத்தில் 10படங்களில் நடித்துள்ளார். 


ஒரு சமயத்தில் இவருக்கு ஹீரோயின் சான்ஸ் கூட வந்திருக்கின்றது. ஆனால் அப்போது தான் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய கதைகள் வந்து அவரின் வாழ்க்கையே மாறிப் போனது. மேலும் 10 வருடங்களாக சினிமாவில் இவருக்கு நடந்த சம்பவங்கள் இவரால் என்றுமே மறக்க முடியாதாம். சினிமாவில் கூட தன்னுடைய குடும்பத்தை எதிர்த்துத் தான் வந்திருக்கின்றார். 

ஆனால் அவர் இந்த முடிவை எடுக்கக் காரணமும் அவரின் வறுமை தான். வறுமையை போக்க என்று சினிமாவில் வந்த இவரை 5வருடமாக அவரின் குடும்பமே ஒதுக்கி வைத்திருக்கின்றது. உன்னை தண்ணி தெளிச்சு விட்டிட்டோம் எனக் கூறி கை கழுவி விட்டார்களாம்.

பின்னர் ரஜினிகாந்தின் 'குசேலன்' படத்தில் வடிவேலுவின் சம்சாரமாக நடித்த பின்பு இவரை இவரின் வீட்டிலும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறாக பல படங்களிலும் கிளாமர் வேடத்தில் நடித்து வந்த இவர் 'மிருகம்' படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்தார். இப்படத்தைத் தொடர்ந்து இவரின் கேரியரும் மாற ஆரம்பித்தது. 

மேலும் மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் நடித்தார். இவ்வாறாக படங்களில் அசத்தி வந்த இவர் தற்போது சீரியல்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். அத்தோடு 2002 இல் 'மிஸ் south india' பட்டத்தையும் வென்றிருக்கின்றார். அதுமட்டுமல்லாது இவர் பல விருதுகளையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement