• Jul 08 2025

திடீரென சூப்பர் முடிவு எடுத்த வாரிசு நடிகை சுருதிகாசன்..!

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தி வரும் நடிகை சுருதிகாசன் அண்மைக்காலமாக தமிழ் படங்களில் பெரிதும் நடிக்கவில்லை மிகவும் திறமையான நடிகை உலகநாயகன் கமல்காசனின் மகள் என்பதால் தமிழில் பல வாய்ப்புகள் கிடைத்தும் இவர் விருப்பம் காட்டவில்லை. ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி " படத்தில் நடித்து வருகின்றார்.


மேலும் சுருதி இந்த படத்தில் சத்யராஜின் மகளாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்டகால இடைவெளியின் பின் மீண்டும் தமிழில் நடித்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் "கூலி " பட புரொமோஷன் நிகழ்வுகளுக்காக தனது படங்களின் சூட்டிங்கை ஒத்திவைத்துள்ளார்.


இந்த நிலையில் இனிமேல் தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார். தமிழில் பல படங்களில் நடிக்க இருப்பதாகவும் முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement