• Dec 27 2024

அமலா பாலின் பையன் செம க்யூட்டா இருக்கே..! ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ...

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிந்து சமவெளி  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் சர்ச்சைக்குரியதாக இருந்த போதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதில் தைரியமாக நடித்தார். அதன் பின்பு பலரது கவனத்தையும் ஈர்த்த அமலா பாலுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

இதைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் கண்களாலேயே பேசியிருந்தார். அதில் அவரது நடிப்பு மிகவும் பிரபலமானது.

அதன்பின் விஜயுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார். பிறகு விக்ரம், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுடைய திருமணம் நீடிக்க வில்லை. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதன் பின் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.


அமலா பாலும் தனது நீண்ட நாள் நண்பனான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில் நடைபெற்றது. திருமணம் ஆன ஒரு சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அமலா பால் அறிவித்தார். அதன் பின்பு கடந்த ஜூன் 11ஆம் தேதி அமலாபாலுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், அமலா பால் முதன்முறையாக தனது குழந்தையின் போட்டோவை வெளியிட்டு ஓணம் வாழ்த்து  தெரிவித்துள்ளார். பாரம்பரிய முறையில் கையில் குழந்தையுடன்  கணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதில் அவரது குழந்தையும் செம க்யூட்டாக உள்ளது. இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Advertisement

Advertisement