• Dec 26 2024

நடிகர் கார்த்தியின் 29 படம் பற்றிய அதகள அப்டேட்..? என்ன கதை தெரியுமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் கார்த்தி. இதில் அவருடைய வித்தியாசமான மற்றும் கம்பீரமான நடிப்பு பலரையும் கவர்ந்தது. அதன் பிறகு தனக்கேற்ற திரைக் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக ஜப்பான் படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. விமர்சன ரீதியாகவும் படுமோசமாகவே விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அடுத்த படங்களை நோக்கி நகர்ந்து விட்டார்.

தற்போது மெய்யழகன், வா வாத்தியார் என இரு படங்களில் நடித்து வருகின்றார். அதன் பிறகு சர்தார் 2 படத்தில் நடிக்க உள்ளார். கிட்டத்தட்ட ஏழு படங்களை கைவசம் வைத்துள்ளார் கார்த்தி.


இந்த நிலையில் கார்த்தியின் 29 வது படத்தை டாணாகாரன் பட இயக்குனர் தமிழ் இயக்க உள்ளாரென தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த படத்தின் கதை 1960ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கேங்ஸ்டார் கதையொன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம். இந்த படம் 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement