சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது சம்பள உயர்வு, நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், போராட்ட இடத்தில் இன்று நடிகை சனம் ஷெட்டி நேரில் வந்து தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், “மேயர் பிரியா மேடை ஏறி செய்தி வாசிப்பாளர் மாதிரி பேசிட்டு போறாங்க. என்ன பயன்? எதுக்கும் தீர்வு கிடைக்கல. மக்கள் பிரச்சனையை கேட்கணும், தீர்வு காணணும்,” என கடும் விமர்சனம் செய்தார்.
மேலும், “இந்த விவகாரத்தில் மாநில உள்துறை அமைச்சர் கே.நேவுரும் பதில் சொல்லணும். நம்ம ஊர் தூய்மையைக் காப்பாற்றுற இவர்கள் சாலையில போராட வேண்டிய நிலை வந்திருக்குது. இது வெட்கக்கேடானது,” என கூறினார்.
போராட்டம் நடைபெறும் இடத்தில் பெண் பணியாளர்களும், குழந்தைகளும் உடன் இருந்ததை சனம் ஷெட்டி பார்வையிட்டு, “இது ஒரு மனிதாபிமான பிரச்சனை. அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கூறினார். தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் பணியாளர் யூனியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், தொழிலாளர்களின் நிலைப்பாடும், அரசின் பதிலும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றன.
Listen News!