• Oct 24 2026

திருநங்கைகளின் வாழ்க்கையைப் பேசிய டோரதி..! ரஜினியின் மகள் வெளியிட்ட முக்கிய பதிவு

shali / 1 week ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள டோரதி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். அவரது எக்ஸ் தளப் பதிவு தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படம், திருநங்கைகளின் வாழ்க்கையையும் அவர்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் சவால்களையும் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

படத்தில் கீர்த்தி சுரேஷ் குறைந்த காட்சிகளில் தோன்றினாலும், அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதேபோல், ஆணாகவும் திருநங்கையாகவும் சனந்த் வெளிப்படுத்திய நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரிஷிகாந்த்தின் நடிப்பும் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், படத்தைப் பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டுகளைப் பகிர்ந்துள்ளார்.

அதில், டோரதி கதாபாத்திரம் உணர்வுப்பூர்வமானதும் ஆழமானதுமான தன்மையைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கதாபாத்திரங்கள் வாழும் உலகத்துக்குள் தாம் முழுமையாக ஈர்க்கப்பட்டதாகவும், அனைவரையும் ஏற்றுக்கொண்டு சமமாக நடத்த வேண்டும் என்பதை நினைவூட்டும் அழகான படைப்பு இது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், சனந்த் மற்றும் ரிஷிகாந்த்தின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.

சௌந்தர்யாவின் இந்தப் பதிவு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்களின் ஆர்வத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement