• Jan 12 2025

'புஷ்பா' கேரக்டரில் மிரட்டிய அஞ்சலி.. மூன்று நாட்களில் மட்டும் 35 மில்லியன்... குஷியில் அஞ்சலி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'கற்றது தமிழ்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

18 ஆண்டுகால சினிமா பயணத்தில் அஞ்சலி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நல்ல திரைப்படங்களை தெரிவு செய்து நடித்து வருகின்றார்.

தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்திலும் அஞ்சலி நடித்து வருகின்றார். விரைவில் அந்தப் படவும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் அவர் நடித்த "Bahishkarana" திரைப்படம் OTT இல் வெளியான மூன்று நாட்களில் சுமார் 35 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தில் தான் நடித்த புஷ்பா கேரக்டருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தனது மகிழ்ச்சியை இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் அஞ்சலி.


Advertisement

Advertisement