தமிழ் திரையுலகில் ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஷால், எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
இந்நிலையில் அவரைச் சுற்றி சமீபகாலமாக பல்வேறு தகவல்கள், விமர்சனங்கள், வதந்திகள் பரவிய நிலையில், அவர் வெளியிட்ட புதிய வீடியோ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக விஷால், நடிகர் சங்க கட்டிடம் முடிந்ததும் அங்கேதான் தனது திருமணத்தை நடத்துவேன் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து, பலர் அவரது திருமணம் எப்போது நடைபெறும் என எதிர்பார்த்தனர். சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவை அவர் திருமணம் செய்யப்போகிறார் என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் பரவியது.
மேலும், ஆகஸ்ட் 29 பிறந்தநாளில் தான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விஷாலின் உடல்நிலை தொடர்பாக “கை நடுக்கம், உடல்நிலை மோசம்” என்ற வதந்திகள் கிளம்பின. இது அவரது ரசிகர்களிடையே கவலைக்குரிய சூழலை உருவாக்கியது.
இந்த நிலையில், தற்போது விஷால் உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் உடற்பயிற்சி செய்வது காட்சியளித்துள்ளது. இதனால், அவரின் உடல்நிலை குறித்து வந்த விமர்சனங்கள் அனைத்தும் தவறானவை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஷாலின் இந்த வீடியோ வைரலாகிய நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில், “இனி கை நடுங்குது, கால் நடுங்குது என்று யாரும் சொல்ல முடியாது” “விஷால் எப்போதும் போலவே பிட்டாக இருக்கிறார்” “பிறந்தநாள் ஸ்பெஷல் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்” என்ற வகையில் பதிவுகள் செய்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 29 அன்று தனது பிறந்தநாளில் திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
உடல்நிலை குறித்த வதந்திகளை முறியடித்து வெளியிடப்பட்ட இந்த வீடியோ, விஷாலின் பிறந்தநாளுக்கு முன்னோட்டமாக ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!