• Dec 26 2024

ஷங்கர் படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாட இருந்தாரா? அதன்பின் என்ன நடந்தது? ஏஆர் ரஹ்மான் பகிர்ந்த தகவல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் ஒன்றில் மைக்கேல் ஜாக்சன் பாட இருந்ததாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’எந்திரன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் - மைக்கேல் ஜாக்சன் சந்திப்பு நடந்ததாகவும் இந்த சந்திப்பு குறித்து ஷங்கரிடம் ஏஆர் ரஹ்மான் கூறிய போது ’எந்திரன்’ படத்திற்காக நீங்களும் மைக்கேல் ஜாக்சனும் ஒரு பாடலை பாடலாமே என்ற ஐடியா கொடுத்ததாகவும் சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து நானும் ஆர்வமாகி மைக்கேல் ஜாக்சன் இடம் பேசினேன் என்றும், அவரும் நீங்கள் என்ன சொன்னாலும் எனக்கு ஓகே, எப்போது வர வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மைக்கேல் ஜாக்சன் இணைந்து பாடும் பாடல் குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்த போதுதான் திடீரென மைக்கேல் ஜாக்சன் இறந்து விட்டதாகவும் அது தனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்ததாகவும் ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை திட்டமிட்டபடி மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகிய இருவரும் ’எந்திரன்’ படத்திற்காக ஒரு பாடலை பாடியிருந்தால் அந்த படம் உலக அளவில் கவனத்தை பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement