நகைச்சுவை உலகத்தில் தனக்கென ஓர் இடத்தை பிடித்த மதுரை முத்து , தனது திறமையான பேச்சு மற்றும் நக்கல் கலந்த காமெடியால் பலரது இதயங்களையும் கொள்ளை கொண்டார். அந்தவகையில் தற்பொழுது மதுரை முத்து செய்த ஒரு செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கின்றது.
மதுரை முத்து, மனைவி மற்றும் பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது சொந்த ஊரான மதுரையில் அவர்களுக்காகக் கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இவ்விழா வெறும் ஆன்மீக நிகழ்வாக இல்லாமல் உணர்வுகள் நிரம்பிய நிகழ்வாகக் காணப்பட்டது.
மதுரை முத்து மேலும், “மனைவி என்னைச் சந்திக்கும் முன் என்னுடைய வாழ்க்கை வெறுமையாக இருந்தது. அவளோட சேர்ந்து வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் அழகாக இருந்தது. அவரை இழந்த பிறகு உண்மையிலேயே வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன். அதேபோல என் அப்பா அம்மா என்னிடம் எதையுமே எதிர்பார்க்காம வளர்த்தாங்க. அவர்களுக்காக நான் செய்யக்கூடிய சிறிய மரியாதை தான் இந்தக் கோவில்" என்றார். மேலும் இந்த விழாவில் பிக்பாஸ் பிரபலம் முத்துக் குமரன் மற்றும் காமெடியன் புகழ் ஆகியோரும் கலந்து கொண்டு இந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
Listen News!