தமிழ் சினிமாவின் தனித்துவமான முகங்களில் முக்கியமானவர் யோகி பாபு. தனது தனிப்பட்ட தோற்றம், டைமிங் காமெடி, உண்மை தன்மையுள்ள நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர். ஆரம்பத்தில் ஒரு காமெடி நடிகராக மட்டுமே ஆரம்பித்த இவரின் வளர்ச்சி, இன்று ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவிற்கும் உயர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
இந்நிலையில், இன்று (ஜூலை 22) யோகி பாபு தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களின் வாழ்த்துகள், இணையத்தில் பதிவுகள், திரைத்துறையினரின் மீம்ஸ்கள் மற்றும் வாழ்த்துகள் என அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் வியக்கத்தக்க அளவில் நடைபெற்று வருகிறது.
‘அரண்மனை 4' ,‘கோலமாவு கோகிலா’, ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் வெறும் காமெடி மட்டும் இல்லாமல், emotional connect கொடுத்தவை. தற்போது அத்தகைய கலைஞரின் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
யோகி பாபு ஒரு நாள் படப்பிடிப்புக்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார் என சொல்லப்படுகிறது. இதனால் அவரிடம் மொத்த சொத்து மதிப்பு சுமார் 75 கோடி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!