• Dec 25 2024

கொடி கட்டிய காதல் புறாக்கள் அட்டகாசம்... ஆண்டவர் எடுக்க போகும் அதிரடி முடிவு - பிக் பாஸ் சீசன் 7

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது ரணகளத்திலும் குதூகலமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசன் போட்டியாளர்கள் எல்லாம் இவர்களுக்கு கால் தூசி மாதிரி என்று நினைக்க வைக்கும் அளவுக்கு ஒவ்வொருவரும் வில்லத்தனத்தின் உச்சம் தொட்டு வருகின்றனர்.


பழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் லவ் கன்டென்ட் கொடுக்க ஒவ்வொருவரும் அலைகின்றனர். ஆரம்பத்தில் மணி ரவீனா ஜோடியின் காதல்தான் பிக் பாஸுக்கு பலமாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.


ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி விக்ரம் பின்னால் பூர்ணிமா காதலா இல்ல வேறயா என தெரியாத அளவுக்கு ஒரு உணர்வுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். 


அப்படியே ஐஷு பக்கம் திருப்பினால் எப்போதும் நிக்சனுடன் அவர் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் இவருக்கு வெளியில் லவ்வர் ஒருவர் இருக்கிறார். அது தெரிந்தும் கூட நிக்சன் ஐஷுவை கண்ணே மூக்கே என கொஞ்சுவது, தடவுவது என கடுப்பேற்றி வருகிறார். அதைத்தொடர்ந்து இப்போது 5 புது வரவுகள் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர்.


ஒவ்வொருவரையும் கவிழ்க்க வேண்டும் என பிளான் போடும் போட்டியாளர்கள் இப்போது கையில் எடுத்திருக்கும் அஸ்திரம் தான் லவ் கன்டென்ட். அதில் பிரதீப் அக்ஷயாவை பிராவோ உடன் நெருங்கி பழகுமாறு அனுப்பி வைக்கிறார். அந்த பொண்ணும் காபி வேணும், டீ வேண்டும் என கேட்டு அவரிடம் ஒரு உறவை உருவாக்க முயற்சி செய்கிறார்.


இப்படி காதல் பறவைகள் உருவாக்கி உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து ஆண்டவர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement