• Dec 25 2024

புற்று நோயால் அவதிப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா- ஏமாற்றிச் சென்ற காதல் கணவன்- இதுவரை அறிந்திடாத விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் தான் மனிஷா கொய்ராலா. 1970 ஆகஸ்ட் 16ம் திகதி நேபாளத்தில் பிறந்தார். ராஜ வம்சத்தைத் சேர்ந்த இவர் மிகவும் வசதி படைத்த பிரபலமாகவே காணப்படுகின்றார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, நேபாளம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் தனது பாட்டி வீட்டிலிருந்தே 10 வது படிப்பை முடித்தார். தொடர்ந்து உயர்கல்வியை டெல்லியில் முடித்தார். இதன் பின்னர் நியூயோர்க்கிற்குச் சென்று சினிமா சம்மந்தமாக படித்துள்ளாராம்.இது தவிர தொடர்ந்து மாடர்லிங்கில் இருந்ததால் நேபாள மொழித்திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.


அதன்படி 1989ல் பேரின் பெட்டர்ஸ் என்னும் நேபாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.இதனைத் தொடர்ந்து சௌதகர் என்னும் பாலிவூட் படத்தில் நடித்திருந்தார். இதனால் பாலிவூட்டில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தொடர்ந்து இவர் நடித்த 1942 லவ் ஸ்டோரி திரைப்படம் தான் இவருக்க நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.இதன் பின்னர் தமிழில் வெளியான பம்பாய் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.


இதன் பின்னர் இந்தியன் முதல்வன் எனப் பல ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் கடந்த 2010ம் ஆண்டு சம்ரத் தால் என்னும் பிஸ்னஸ் மேனைத் திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு அன்வர் என்றும் ஒரு சகோதரன் உள்ளார். இதனை அடுத்து இவருக்கு 2012ம் ஆண்டு புற்று நோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து கணவரும் விவாகரத்து செய்து விட்டாராம். 


இவர் ஜநாவின் அம்பாஸ்டராகவும் இருந்து வருகின்றார்.நேபாளத்தில் பூகம்பம் வந்த போது பல பேருக்கு உதவிகளை வாரி வாரி செய்து வந்தாராம்.இது தவிர தற்பொழுது புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சாளராக இருந்து வருகின்றாராம். மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் அமெரிக்காவில் தான் அதற்கான சிகிச்சையை எடுத்து வந்துள்ளதோடு தற்பொழுது குணமடைந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement