• Jul 19 2026

ரேகாவுக்கு சிந்தாமணி விட்ட சாபம்..? மனோஜுக்கு அடித்த ஜாக் பாட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , திருமணமான ரேகாவை பார்த்து தன்னுடன் வருமாறு சிந்தாமணி அழுது புலம்புகின்றார். ஆனாலும் சத்யா நல்லவன், அவன் என்னை நன்றாகப் பார்ப்பான் என்று தன் பக்கத்தை கூறுகின்றார். ஆனாலும் மனவேதனையின் விரக்தியில், “நீ சத்யாவுடன் நன்றாகவே வாழ மாட்டாய்” என்று சாபம் விட்டுச் செல்கின்றார் சிந்தாமணி.

இதனால் ரேகா கதறி அழுகின்றார். அதன் பின்பு சத்யா அவரை சமாதானப்படுத்தி தூங்கவைக்கின்றார். இதை எல்லாம் பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார்.

இன்னொரு பக்கம் மனோஜ் திருமணம் பற்றி யோசித்துக் கொண்டிருக்க, ஜீவாவும் வந்து தான் ஒரு செய்தி பார்த்ததாகவும், அதில் விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்தால் என்னென்ன தண்டனை கிடைக்கும் என்றும் பட்டியல் போடுகின்றார்.


ஆனாலும் குறித்த தேதியில் கல்யாணம் நடக்க வேண்டும், உங்களுக்கு எல்லா கிரகமும் சப்போர்ட்டாக இருக்கின்றது என்று மனோஜுக்கு நம்பிக்கை கொடுக்கின்றார்கள்.

அத்துடன் கனகாவின் அம்மாவும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, திருமணத்திற்கு உடுப்புகள் வாங்குமாறு கொடுத்து அனுப்புகின்றார்.

இறுதியாக சத்யாவும் ரேகாவும் அவர்களுடைய அம்மா வீட்டிற்கு வருகின்றனர். அங்கு ரேகா விளக்கேற்றி தன்னுடைய திருமண வாழ்க்கையை தொடங்குகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement