• Jul 19 2026

டிமான்ட்டி காலனி 3’க்கு ‘A’ சான்றிதழ்… ரிலீஸுக்கு முன்பே அதிகரித்த எதிர்பார்ப்பு!

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘A’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வெளியான இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ஹாரர் திரில்லர் படங்களுக்கென தனி இடத்தைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இரண்டாம் பாகத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், படத்தின் சாட்டிலைட் மற்றும் OTT உரிமையை ஜீ5 நிறுவனம் சுமார் ரூ.50 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதுவரை அதிக தொகைக்கு விற்பனையான முதல் தமிழ் ஹாரர் திரைப்படமாகவும் இது அமையக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் இரண்டு பாகங்களின் வெற்றியால் மூன்றாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், வன்முறை மற்றும் தீவிரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முந்தைய பாகங்களை விட இன்னும் விறுவிறுப்பான மற்றும் திகில் நிறைந்த அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement