• Jul 19 2026

ரோகிணியின் வாழ்க்கையில் புதிய திருப்பம்... கர்ப்ப செய்தியால் அதிர்ச்சியில் மனோஜ்!

Aathira / 8 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பரபரப்பான கதை களத்துடன் நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று வெளியான புதிய ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ப்ரோமோவில், மனோஜ் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த விவகாரத்தை தொடர்ந்து ரோகிணி விஜயாவின் வீட்டிற்கு வருகிறார். அங்கு, வாக்குமூலத்தில் கையெழுத்திட்டு விட்டு செல்லுமாறு விஜயா அவரிடம் கூறுகிறார்.

வேறு வழியில்லாமல் ரோகிணியும் கையெழுத்திட முயற்சிக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுகிறார். இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.


பின்னர் ரோகிணியை பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. இந்த தகவல் குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மனோஜ் இந்த செய்தியால் பேரதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

ஏற்கனவே மனோஜ், குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ரோகிணியின் கர்ப்பம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீரியலின் அடுத்தடுத்த காட்சிகள் மேலும் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


  

Advertisement

Advertisement