• Jul 19 2026

மனோஜுக்கு நடந்து முடிந்த திருமணம்.. ரோகிணி கேட்ட கேள்வி.! சந்தோஷ் சொன்ன ஷாக் நியூஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மணமகளுக்கு ரோகிணி அலங்காரம் செய்து அவரை புகைப்படம் எடுக்கிறார். இதைப் பார்த்த மணமகளின் அம்மா, இனி என்ன பங்க்ஷன் என்றாலும் உன்னைத்தான் கூப்பிடுவேன் என்று கூறுகிறார்.

அவர் வெளியே வரும்போது சந்தோஷை பார்க்கிறார். அப்போது மனோஜ் குறித்து விசாரித்த அவர், அந்த ஐந்து லட்சம் ரூபாயை எப்போது தருவார்? என்று கேட்டுவிட்டு செல்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மனோஜின் அறைக்குச் சென்ற சந்தோஷ், உனக்கு திருமணம் நடக்காது. மொத்த குடும்பமும் இங்குதான் இருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு மனோஜ், அவர்கள் போனால்தான் திருமணம் நடக்கும் என்று கனகாவின் அம்மாவிடம் கூறுகிறார்.


இதனால், கனகாவின் அம்மா முத்து மற்றும் மீனாவிடம் சென்று, திருமணம் நடக்க இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்று கூறுகிறார். இதனால், அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது என்று கூறி அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றனர்.

அதன்பிறகு, ஒரு வழியாக மனோஜ் கனகாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார். அந்த நேரத்தில் ரோகிணியையும் நினைத்துப் பார்க்கிறார். ஆனால், கோடீஸ்வரன் ஆகும் கனவில் இருப்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, கனகாவின் அம்மா, திருமணம் முடிந்த பிறகு கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று அவர்களை அழைத்துச் செல்கிறார். அந்தக் கோயிலில்தான் பார்வதியும் விஜயாவும் இருப்பதைக் காண்கிறார்கள். இதுவே இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement