தற்போது தெலுங்கு திரையுலகின் முக்கியமான நட்சத்திரங்களுள் ஒருவராக உள்ள விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படம், கடந்த ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
‘கிங்டம்’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் கவுதம் தின்னனுரி இயக்கியிருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தகைய படம் வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையே பெற்று வந்தது.
தற்பொழுது கிங்டம் படம் இன்று வரை எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரூ.67 கோடி வசூலைத் திரட்டியுள்ளது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது படத்தின் வரவேற்பு மற்றும் வருமானத்தில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
Listen News!