நடிகர் மதன் பாப் (வயது 71) நேற்று (ஆகஸ்ட் 2) சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து, ரசிகர்களின் மனதை கவர்ந்த மதன் பாப் மறைவால் அனைவரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
மதன் பாப் இறப்புக்கு நடிகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், நடிகர், இயக்குநர் மற்றும் திரையுலகின் பல பகுதிகளிலும் பணியாற்றியவர்கள் அவரது சாதனையை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இன்று (ஆகஸ்ட் 3) மதன் பாப் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது இல்லத்தில் திரையுலகின் முக்கிய நபர்கள், ரசிகர்கள் கூட்டம் ஒன்று திரண்டிருந்தனர். அதன்போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்து, மதன் பாபின் நினைவுகள் சிலவற்றை கூறியிருந்தார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், "மதன் பாப் நல்ல மனிதர். நான் என்னுடைய ஒரு நண்பரை இழந்திருக்கிறேன். எனக்கு அவருடன் நிறைய அனுபவங்கள் இருக்கு. தெனாலி ரீ ரெக்கார்டிங்கில் தான் எனக்கு அவர் இசைக்கலைஞர் எனத் தெரியும்.
ரஹ்மான் படத்தைப் பார்த்து விட்டு, இந்த கேரக்டர் இவருக்கு கொடுத்ததற்கு Thank you என்றார். எதற்கு எனக் கேட்டபோது, இவர் என் குருக்களில் ஒருவர் என்றார். இவர் கிட்ட ரஹ்மானே பணியாற்றியிருக்கிறார். இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கிறது." எனக் கூறியுள்ளார்.
Listen News!