தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகர் விஜய் சேதுபதி, தற்போது தனது 52வது படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்துடன் களமிறங்கியுள்ளார். 'தலைவன் தலைவி' எனும் தலைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், குடும்ப பின்னணியைக் கொண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் ஹிட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ், முதல் முறையாக விஜய் சேதுபதியை இயக்கியிருக்கிறார். கடந்த ஆண்டுகளில் சிவகார்த்திகேயன், கார்த்தி, சூர்யா எனப் பலருடன் பாக்ஸ் ஆபிஸில் பட்டையக் கிளப்பிய பாண்டிராஜ், இந்த முறை ரசிகர்களின் மனதில் பதியக்கூடிய ஒரு கதையுடன் வந்திருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததுடன் அவருக்கு துணையாக நித்யா மேனன், மற்றும் காமெடியில் கலக்கும் யோகி பாபுவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக முடிவடைந்துள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ், படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை 25 என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழில் ‘தலைவன் தலைவி’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இப்படம், தெலுங்கில் “சார் மேடம்” (Sir Madam) என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்த தெலுங்கு டைட்டில் டீசர் தற்போது வெளியான நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Listen News!