• Mar 10 2025

பான் மசாலா விளம்பரத்தால் சிக்கிய நடிகர்கள்...யார் யார் தெரியுமா?

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

பான் மசாலா விளம்பரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக நடிகர்கள் ஷாருகான், அஜய் தேவ்கன் மற்றும் ரைகர் ஷராப் ஆகியோருக்கு ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் நடித்துள்ள பான் மசாலா விளம்பரத்தில் குங்குமப்பூ கலந்துள்ளது என்ற தகவல் முற்றிலும் தவறானது என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இந்த விளம்பரத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அவரது கூறியதாவது, 1 கிலோ குங்குமப்பூவின் விலை ரூ.4 லட்சம் ஆக இருக்கின்றது. அதனால் பான் மசாலா போன்ற குறைந்த விலையிலான பொருட்களில் குங்குமப்பூ சேர்க்க முடியாது. இதனால் இவ்விளம்பரத்தில் கூறப்பட்ட தகவல்கள் பொது மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றார். அத்துடன் இதன் விளைவாக சாதாரண மக்கள் புற்றுநோயுக்கு ஆளாகும் அபாயம் அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.


இந்த புகாரை அடுத்து, ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் இந்த பிரபல நடிகர்களுக்கு அவசர நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விளம்பரத்தில் அவர்கள் தவறான தகவலை பரப்பி இருக்கிறார்களா? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளார். 


இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. சிலர்,“நடிகர்கள் விளம்பரத்தில் நடிக்கும்போது அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டியது அவசியம்” எனக் கூறுகின்றனர். மற்றொருபுறம்,இதனை “விளம்பர நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் நடிகர்கள் ஒன்றும் விஞ்ஞானிகள் அல்ல” என எதிர்வினை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement