சினிமா ரசிகர்களுக்கு எப்பொழுதும் விஜய் தொடர்பான செய்திகள் பெரும் ஆர்வத்தைக் ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகர் ஷாம் விஜய் பற்றி கதைத்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த நேர்காணலின் போது நடுவர் ஷாமிடம் சமீபத்திய விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஷாம் பதில் கூறுகையில், "விஜய் எப்போதும் தனது வேலையில் தெளிவாக இருக்கிறார். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் எப்போது செய்ய வேண்டும் என்றும் தெரியும். ஆனால் சிலர் அவருக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள். அவர்களைப் பார்த்தா எனக்கு சிரிப்பு தான் வருது!" எனத் தெரிவித்தார்.
அத்துடன் "விஜய் எப்போதும் தன் மனசாட்சி கூறும் வழியில் செல்பவர் என்றதுடன் அவரை வழிநடத்த யாரும் தேவையில்லை என்றார். ஏனெனில் அவர் தனது அனுபவத்தின் மூலம் மிகச் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்" என வலியுறுத்தினார்.
சமீப காலமாக, விஜய்க்கு பலரும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். அவரின் அரசியல் வருகை, திரைத் தொழில் மாற்றங்கள் மற்றும் மக்களுடனான தொடர்பு போன்றவை குறித்து பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஷாமின் இந்தக் கருத்துக்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பலரும், "விஜய் எப்போதும் தன்னம்பிக்கை கொண்டவர், அவர் தனக்குத் தேவையான முடிவுகளை தானே எடுப்பார்" என்று சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், சிலர் ஷாமின் கூற்றை எதிர்த்து, "ஒருவருக்கு ஆலோசனை வழங்குவது தவறல்ல, ஆனால் அதைப் பயனுள்ள முறையில் சொல்ல வேண்டும்" என்றும் குறிப்பிடுகின்றனர்.
Listen News!