• Dec 25 2024

ஈரமான ரோஜாவே சீரியல் சித்ரா யார் தெரியுமா?- இத்தனை சீரியலில் நடித்திருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் வில்லி சித்ரா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சமந்தா கிரண். இவருக்கு இந்த சீரியல் மூலம் நல்ல அடையாளம் கிடைத்துள்ளது.எனவே அவர் குறித்து பார்ப்போம் வாங்க.

இவர்  படிக்கும் போது தான் மீடியாவுக்குள்ளே நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததாம். அதன்படி ஜெயம் என்னும் சீரியலில் தான் முதல் முதலாக நடித்தாராம். தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பான செல்லம், வம்சம் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.


அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்திருந்தாராம். இவர் சீரியலில் நடிக்கும் போது முதலில் இவருடைய குடும்பத்தினர் ஓகே சொல்லவில்லையாம். பின்னர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தான் நடித்து வருகின்றாராம்.

அத்தோடு இவர் பொதுவாக தனது குடும்ப வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து எப்போதும் வெளிப்படையாகப் பேச மாட்டாராம். தன்னுடைய அம்மா குறித்து தான் அதிகமாகப் பேசுவாராம். இவருக்கு எப்போதும் பிடித்த சீரியல் என்றால் நிலா தானாம்.இதில் இவர் பிடித்த கதாப்பாத்திம் இவருக்கு பிடிக்குமாம்.


அத்தோடு இவர் கலர்ஸ் தமிழ் ஷு தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்களில் நடித்திருக்கின்றாராம்.மேலும் இவர் யாரும் அட்வைஸ்ட் பண்ணினால் தான் நடிப்பாராம். இதனால் தான் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பினைத் தேடாமல் இருக்கின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement