• Dec 25 2024

காற்றுக்கென்னவேலி சீரியலில் வில்லனாக நடிக்கும் மானஸ் யார் தெரியுமா?- சீரியலில் இப்படித் தான் நடிக்க வந்தாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் தான் காற்றுக் கென்ன வேலி. இந்த சீரியலில் மாதவன் என்னும் வில்லன் காரக்டரில் நடித்து வருபவர் தான் மானஸ்.இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி அடையாளம் கிடைத்துள்ளது. அந்த வகையில் இவர் குறித்து பார்ப்போம் வாங்க.

சென்னையை சேர்ந்த இவர்  கொஞ்சம் ரிச்சான பஃமிலியாகத் தான் இருந்திருக்கிறாங்க. அத்தோடு இவருடைய தோற்றத்தையும் அழகையும் பார்த்து பலரும் நீங்க நடிக்கலாம் என்று சொன்னதால் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு பல ஆடிஷனுக்கும் போயிட்டு இருந்தாராம்.


இதன்படி முதலில் ஒரு சீரியலில் கமிட்டாகி நடித்தாராம். ஆனால் அந்த சீரியல் ஒளிபரப்பப்படவே இல்லையாம். அதனைத் தொடர்ந்து இவருடைய வீட்டில் வேலை செய்பவர் மூலம் தான் வாணி ராணி சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததாம். சின்னத்திரையில் அறிமுகமாகிய புதிதில் திமிரான காரக்டராகவே இருந்தாராம். யாருக்குமே மதிப்புக் கொடுக்காமலே பேசிட்டு இருப்பாராம்.

பின்பு காலம் செல்ல செல்ல தான் மற்றவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என புரிந்து கொண்டாராம். அதன்படி இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர், அரண்மனைக்கிளி போன்ற சீரியல்களில் நடித்திருக்கின்றார். இவற்றிலும் வில்லனாக தான் நடித்திருந்தாராம்.


சீரியலில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைஃப்பில் ஹுரோவாக தான் இருந்து வருகின்றாராம். அத்தோடு அவர் தனது பள்ளிப் பருவத்திலேயே காதலித்த பெண்ணைத் தான் திருமணம் செய்து கொண்டுள்ளதோடு மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றாராம். மேலும் காற்றுக் கென்ன வேலி சீரியலில் தனது வில்லத்தனத்தை முழுமையாகக் காட்டி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement