• Dec 25 2024

'எதிர்நீச்சல்' ஜீவானந்தத்தின் நிஜ மனைவி யார் தெரியுமா...? விஜய்யுடன் இவருக்கு இப்படி ஒரு தொடர்பா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமே இந்த சீரியலினுடைய கதை தான். பெண் அடிமைத்தனத்தை மையமாக கொண்டு இந்த சீரியலை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் தான் இயக்குநர் திருச்செல்வம்.


இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்னர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றி இருந்தார். இதன் பின்னர் 2002ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' என்ற தொடரின் இணை இயக்குநராக பணியாற்றினார்.

இதனைத் தொடர்ந்து இவர் 'கோலங்கள்' என்ற சீரியலின் மூலமாக புகழ் பெற்ற இயக்குநராக மாறினார். அதாவது இந்த சீரியலானது மிக பெரிய அளவில் ஹிட் ஆகி, இயக்குநர் திருச்செல்வத்திற்கு பேரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது. அதுமட்டுமல்லாது இந்தத் தொடருக்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.


கோலங்கள் சீரியலின் வெற்றியினையடுத்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற மேலும் பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார். அத்தோடு 'எதிர்நீச்சல் சீரியலின்' வாயிலாக கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு விட்டார். இந்த சீரியலினுடைய இயக்குநராக மட்டுமன்றி ஒரு நடிகராகவும் நடித்துள்ளார். அதாவது இதில் ஜீவானந்தம் என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகின்றார்.


மேலும் விஜய்க்கும் இவருக்கும் ஒரு தொடர்பும் உண்டு. அதாவது நடிகர் விஜய்க்காக ஒரு படக்கதையை தயார் செய்து வைத்திருந்தார் திருச்செல்வம். விஜய்யும் அந்தக் கதையைக் கேட்டு ஓகே சொல்லி இருக்கின்றார். ஆனால் அவர்களால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போயுள்ளது. 


இவ்வாறாக பன்முகத்திறமை கொண்ட திருச்செல்வம் அவர்களின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், இவரின் மனைவி பெயர் பாரதி, இவர் ஒரு சிவில் இன்ஜினியராக இருக்கிறார். அதாவது ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை செய்துள்ளார். இருப்பினும் திருச்செல்வம் ஒரு விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்ஷனில் இவருக்கு சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்துள்ளது.


சீரியலில் மட்டுமன்றி நிஜ வாழ்க்கையிலும் சிறந்த குணாதிசயங்களை கொண்டவராக விளங்கி வருகின்ற திருச்செல்வம் அவர்களை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement