• Jan 13 2025

யாழ்ப்பாணத்திலிருந்து சரிகமப’ நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் கில்மிசா யார் தெரியுமா?- இவருடைய லட்சியம் இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் அண்மையில் ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் தமது குரல் வளத்தை வெளிப்படுத்தி நடுவர்களைக் கவர்ந்ததோடு செலக்ட் ஆனார்கள்.

அவர்கள் வரிசையில் அனைத்து நடுவர்களின் விருப்பத்திற்குரிய பாடகியாக தேர்வாகியவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிசா. இவரது குரலைக் கேட்டு நடுவர்களே அசந்து போனதோடு தற்பொழுது ட்ரெண்டிங் பாடகியாகவும் கில்மிசா இருக்கின்றார்.


இவர் தற்பொழுது கில்மிசா என்ற யூடியூப் சேனலையும் ஆரம்பித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க இவர் பற்றிய அறியாத தகவல்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

கில்மிசா யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு தரம் 8ம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றாராம். தன்னுடை யமூன்று வயதில் இருந்த பாட ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் கோயில்களில் பஜனைப் பாடல்களை மாத்திரமே பாடி வந்தாராம். பின்னர் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் மூலம் தான் பாடகியாக மாறினாராம்.

இவர் சாரங்கா இசைக்குழு என்ற குழுவுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளில் படி இருக்கின்றாராம். இது தவிர இந்தியப் பாடகர்களான ரமணியம்மா, அஜய் கிருஷ்ணா, வர்ஷா ஆகியோருடனும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பாடி இருக்கின்றாராம். அத்தோடு பல விருதுகளையும் பெற்றிருக்கின்றாரம்.


மேலும் யாழ்ப்பாணத்தில் நடந்த இசைக்கச்சேரிக்கு சரிகமப குழு வந்திருந்தார்களாம். அவர்கள் தான் கில்மிசாவின் குரலைக் கேட்டு சரிகமப நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பினை வாங்கிக் கொடுத்தார்களாம். கில்மிசாவுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவாம். அவர் பாடகியாகவும் இருந்து கொண்டு டாக்டராகவும் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவருக்கு நடனம் நடிப்பு எல்லாக் கலையும் தெரியுமாம். கலையுலகில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இவருடைய குடும்பமும் இவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement