• Dec 25 2024

சரிகமபவில் பாடும் இலங்கை குயில்களுக்கு அடித்தது லக்... லட்சக்கணக்கில் பணத்தை வாரிவழங்கிய யாழ் வர்த்தகர்... ஏன் தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் ரியாலிட்டி ஷோ தான் சரிகமப நிகழ்ச்சி. ரசிகர்களிடத்தே இந்த நிகழ்ச்சிக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில் நேற்று நடந்த சரிகம்ப ஷோவில் இலங்கை பாடும் குயில்களுக்கு லட்சக்கனக்கில் நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. 


இந்தியாவின் சரிகமப நிகழ்ச்சியில் பாடும் இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்தை சேர்ந்த கில்மிஷா மற்றும் அஷானி ஆகியோருக்கு அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு வர்த்தகர்களால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.


“JAFFNA WIN SWEET” உரிமையாளரான நல்லூரை சேர்ந்த சுதன் அவர்களால் அசானி கில்மிசா இருவருக்கும் தலா இரண்டு இலட்சம் வழங்கப்பட்டது.மேலும் தியாகி அறக்கொடை நிறுவுனரால் அசானிக்கு 10 இலட்சமும், கில்மிஷாவுக்கு 5 இலட்சமும், மேலும் போட்டியில் பங்குபற்றிய தமிழகத்தை சேர்ந்த மேலும் சில குழந்தைகள் உட்பட மொத்தம் 3 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement