• Jun 14 2026

படப்பிடிப்பை அவசர அவசரமாக முடித்த 'சேயோன்' படக்குழு.. என்ன காரணம் தெரியுமா.?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் "சேயோன்" திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். மேலும் ரச்சில் ரெபேக்கா, அருள் தாஸ் மற்றும் பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். இப்படத்தை Raj Kamal Films International நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


சமீபத்தில் உசிலம்பட்டியில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பு 24 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்தின் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஜூலை மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், அதே மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் "சேயோன்" திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement