சமீபத்தில் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற வெப்தொடரான 'பேமிலி மேன் 3' இல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ரோஹித் திடீரென மரணம் அடைந்த செய்தி, தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் உள்ள கர்பாங்கா காட்டின் அருகே அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சி பகுதியிலேயே அவரது உடல், ஏப்ரல் 27ம் திகதி கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ரோஹித் உடலில் பல்வேறு காயங்கள் காணப்பட்டதாகவும், இது சாதாரண விபத்து அல்ல என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அவரது கை, கால் மற்றும் முதுகுப்புறத்தில் காயங்கள் காணப்படுகின்றன.
மேலும் காவல்துறை அதிகாரிகள் , "ரோஹித், ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் தனது நண்பர்களுடன் சுற்றுலாப் பயணமாக கர்பாங்கா காட்டிற்கு சென்றுள்ளார். எனினும், மாலை நேரம் இவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் நடந்த தேடல் நடவடிக்கையில், நீர்வீழ்ச்சி அருகே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது." எனக் கூறியுள்ளனர்.
ரோஹித்தின் நண்பர்கள் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலங்களின் படி, சுற்றுலா பயணத்தின் போது குழுவினர் ஒரு கட்டத்தில் பிரிந்துவிட்டனர். ரோஹித் தனியாகவே நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்றிருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.
இளம் வயதிலேயே தனது திறமையால் திரை உலகை கவர்ந்த ரோஹித்தின் மரணம், திரையுலகம் மட்டுமின்றி, அவரது ரசிகர்களிடையும் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளிவர வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருக்கின்றது.
Listen News!