தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரபல இயக்குநரும் நடிகருமான மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த படம் பெண்மையை மையமாகக் கொண்ட கதைக் களத்தில் உருவாக உள்ளதாம்.
இயக்குநராக மட்டுமில்லாமல் தான் இயக்கும் படங்களில் நடித்தும் உள்ளார் மிஷ்கின். தமிழ் சினிமாவை தாண்டி துல்கர் சல்மானின் தி கேம் படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகின்றார். இவரது இயக்கத்தில் வெளியான பிசாசு 2, ட்ரெயின் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களுடன் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
இந்த நிலையில், விஜய்யின் அரசியல் பற்றி பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மிஷ்கின் பதில் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,
நான் ஒரு சுத்தமான சினிமாக்காரன். அரசியல் பற்றி எதுவும் பேசினது இல்லை. விஜயின் சினிமா கேரியர் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அரசியல் பற்றி எனக்கு தெரியாது.
விஜய் சினிமாவில் கடுமையான உழைப்பாளி. ரொம்ப நல்ல மனுஷன். எனக்கு இதுதான் தெரியும். எனவே இதை அரசியலாக நீங்க முலாம் பூச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தெரு நாய்களின் விஷயத்தில் கருத்து தெரிவித்த மிஷ்கின், மனிதர்களுக்கு கருத்தடை செய்ததைப் போல் நாய்களுக்கு பண்ண முடியாமல் போனதால் அது பெருகிவிட்டது. உயிர்வதை கொடுமையானது. அதே நேரத்தில் நாய்களால் வரும் பாதிப்புகளை தடுக்கவும் வேண்டும். இந்த விஷயத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும் என்றார்.
Listen News!