• May 08 2025

உண்மையான நட்பு எமனையும் வெல்லும்...! சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த கேப்ரில்லா..!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையின் பிரபலமான சீரியல்களில் ஒன்றான "சுந்தரி" சீரியலின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கேப்பிரில்லா. தனது இயல்பான நடிப்பால் குடும்ப வட்டாரத்தில் விருப்பத்துடன் பார்க்கப்படும் நடிகையாக உயர்ந்துள்ள இவர், தற்போது தனது வாழ்வின் ஒரு புதிய கட்டத்திற்கு சென்றுள்ளார். சமீபத்தில் பெற்றெடுத்த பெண் குழந்தையின் பிறப்பு அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.


சமீபத்தில் தனது அழகான பெண் குழந்தையை பெற்ற பிறகு, கேப்ரில்லா இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பல உணர்வு பூர்வமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றார். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவில், தனது கர்ப்ப காலத்தில் உண்மையிலேயே நிழலாக நின்ற ஒரு நண்பியின் உதவியை நினைவுகூரும் விதமாக கேப்ரில்லா உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்துள்ளார். வீடியோ மூலம் அவர் கூறியதாவது, "உண்மையான ஒரு நட்பு, எமன் கிட்ட இருந்தாலும் நம்மைக் காப்பாத்தி கொண்டு வரும்… கூட்டம் சேரும் பொய்மை நாடக மனிதர்கள் முன்பு உரிமைக்கு மட்டும் சொந்தம் கொண்டாடும் சில சொந்தங்களுக்கு மத்தியில் இவள் தெய்வம் எனக்கு…" என்று தெரிவித்திருந்தார். 


இந்த வீடியோவிற்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் "உண்மையான நட்புக்கு இது தான் அங்கீகாரம்" என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர். இந்த வீடியோ வெறும் நன்றியுரையாக இல்லாமல், இன்றைய சமூகத்தில் உண்மையான உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் வலியுறுத்துகிறது. 



Advertisement

Advertisement