• Dec 26 2024

ஜெஃப்ரி பாத்ரூம் பக்கமே பாக்கிறான்..! தனது Game -ஐ ஆரம்பித்த ஜாக்குலின்?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் யாராலையும் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக பங்கு பற்றிய பிரதீப் ஆன்டனி ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்டார். அதற்கு முக்கிய காரணமாக மாயாவும் பூர்ணிமாவும் காணப்பட்டார்கள்.

பிக் பாஸ் சீசன் 7ல் பிரதீப் ஆன்டனிக்கு ஆரம்பத்திலேயே அமோக வரவேற்புகள் கிடைத்தது. அவர் இறுதி வரை சென்று டைட்டிலை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கு என பேசப்பட்டது. எனினும் பிக் பாஸ் வீட்டில் இருந்த பெண்கள் அவர் தங்களை தப்பாக பார்ப்பதாகவும், பாத்ரூமை திறந்து வைத்துக் கொண்டு போவதாகவும் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனை நம்பிய கமல் அவரிடம் விசாரிக்காமல் நேரடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியிருந்தார்.


இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனிலும் இதுபோன்ற சம்பவம் இடம் பெறுவதற்கான அணுகுமுறைகள் தற்போது நடைபெறுகின்றது. அதாவது பிக் பாஸ் வீட்டில் காணப்படும் போட்டியாளரான ஜெஃப்ரி பாத்ரூம் பக்கமே பார்த்துட்டு இருக்கிறார். ஒரு மாதிரி அசிங்கமா பெண்கள் ரூமை பார்க்கின்றார். எங்களுக்கு அன்கம்ஃபர்டபிளாக உள்ளது என  அவரது பெயரை ஜாக்குலின் டேமேஜ் செய்துள்ளார்.

இப்படி போன சீசன் போலவே பிளான் பண்ணிட்டாங்க கேர்ள்ஸ் டீம் என தீபக், ரஞ்சித், முத்துக்குமாரன் ஆகியோர் ஜாக்குலின் தந்திரமான ஆட்டத்தை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு விஜய் சேதுபதி எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்து உள்ளார்கள்.

Advertisement

Advertisement