• Dec 26 2024

நடிகர் கருணாகரன் வீட்டில் திருட்டு சம்பவம்! திருடப்பட்ட 60 பவுன் நகை!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் தான் கருணாகரன்.  இவர் சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் அறிமுகமானார். சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, லிங்கா, இறைவி, ஒருநாள் கூத்து என 25க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில் காரப்பாக்கத்தில் உள்ள நடிகர் கருணாகரன் வீட்டில் இருந்த 60 பவுன் தங்க நகை திருட்டு போய் உள்ளது. இந்த விவகாரத்தில் கருணாகரனின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.


அதில் கருணாகரன் வீட்டில் பணிபுரிந்த விஜயா (வயது 44) என்பவர் நகையை திருடியது உறுதியானதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த விடையம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

Advertisement

Advertisement