பிக்பாஸ் OTT புகழான நடிகை ஊர்பி ஜாவேத் தான் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பதற்காக பல வித்தியாசமான முயற்சிகளில் களம் இறங்கி வருகின்றார். இவர் சோசியல் மீடியாவுக்கு கிடைத்த ஹாட் டாப்பிக்காவே காணப்படுகிறார்.
1997 ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்த ஊர்பி ஜாவேத், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே முடித்துள்ளார். அதன் பின்பு சின்னத்திரை, மாடலிங் என சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். தான் எப்போதுமே ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அணியும் உடைகளில் வித்தியாசம் காட்டி வருகின்றார்.
இதனால் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து உடை அணிந்து வந்த ஊர்பி ஜாவேத், சிறுவயதில் இருந்தே வித்தியாசமான உடைகளை அணிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட ஒருவராகவும் காணப்பட்டுள்ளார். இதனாலையே இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் ஒரு முறை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது உடலில் பேன், விசிறி, செல்போன் என எலக்ட்ரானிக் பொருட்களால் ஆன ஆடை அணிகளையும் பூ, இலை, காய் என இயற்கையால் செய்யப்பட்ட ஆடைகளையும் அணிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஊர்பி ஜாவேத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஊர்பி ஜாவேத்தின் வயிற்றுப் பகுதியில் இரண்டு கைகள் பொருத்தப்பட்டு அதில் தண்ணீர் கிளாஸ் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதை அவர் எடுத்துக் குடிக்கும் காட்சியும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ..,
Listen News!