கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 ஜனவரி 19ஆம் தேதி உடன் நிறைவுக்கு வந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அவருக்கு பணப் பரிசு மற்றும் பிக்பாஸ் டிராபி வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தில் சௌந்தர்யாக்கும், மூன்றாவது இடம் விஜே விஷாலுக்கும் கிடைத்தது. மேலும் இவருக்கு ஐந்து லட்சத்திற்கான தொகையும் கிடைத்தது.
d_i_a
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது விஜே விஷால் ஒரு பிளேபாய் ஆக காணப்பட்டார் . பவித்ரா, தர்ஷிகா உடன் காதல் வலையில் சிக்கிய இவர் சுனிதா, அன்சிதா கூடவும் நெருக்கமாக காணப்பட்டார். இதனால் இவர் இந்த சீசனின் காதல் மன்னனாக கலாய்க்கப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு விஜே விஷாலுக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் ஆல்பம் சாங் ஒன்றில் நாயகனாக நடித்துள்ளார். இது தொடர்பான போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் விஷால் ஹீரோவாக நடித்த ஆல்பம் பாடலின் போஸ்டரை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரவீந்திர் சந்திரசேகரர், அதனை பகிர்ந்து விஷாலுக்கு வாழ்த்துக்கள் சொன்னதோடு 'உங்களை பெரிய திரையில் காண ஆவலோடு உள்ளேன்.. நீ எப்பவுமே ஹீரோ தான்..' என தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், விஜே விஷால் ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ப்ளேபாய் ஆகவே காதல் பாடல் ஒன்றுக்கு கலக்கலாக நடனமாடி உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப ஸ்டைலா ஆடுறீங்க.., உங்க காதல் கான்செப்ட் மட்டும் மாறவே இல்லையா? என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
#VJVishal 💥💥💥#BiggBossTamil8 #BiggBossTamilSeason8
pic.twitter.com/M2HWBSzf6v
Listen News!